நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நியூசிலாந்து விபத்தில் மரணமடைந்த மாணவர்களின்  குடும்பத்தாருக்கு உதவ வெளியுறவு அமைச்சு தயார்: முகமத் ஹசான்

சிரம்பான்:

நியூசிலாந்து விபத்தில் மரணமடைந்த மாணவர்களின்  குடும்பத்தாருக்கு உதவ வெளியுறவு அமைச்சு தயாராக உள்ளது.

அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முகமத் ஹசான் இதனை தெரிவித்தார்.  

நியூசிலாந்தின் லேக் தேக்காப்போ பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மேலும் மூன்று மலேசிய மாணவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக நியூசிலாந்தின் சவுத் தீவுகளில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மெகாட் அஸ்மான் அஃபிக், வான் நூர் அட்லினா ஆகியோர் மரணமடந்தனர்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் மரணமடைந்தவர்களின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர வெளியுறவு அமைச்சு உதவும்.

அதே வேளையில் நியூசிலாந்தில் உள்ள தூதரகம் இவ்விவகாரத்தில் உரிய உதவிகளை செய்ய தயாராக உள்ளது.

ரெம்பாவ் தொகுதி தேசிய முன்னணியின் நோன்பு திறப்பு நிகழ்வு இன்று சிரம்பானில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஶ்ரீ முகமத ஹசான் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், நெகிரி மாநில மஇகா தலைவர் டத்தோ விஎஸ் மோகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset