நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணம் இருந்தாலும் அதைக் கொடுப்பதற்கு மனம் வேண்டும்;  டத்தோ அப்துல் ஹமிட் சேவைக்கு எனது பாராட்டுக்கள்: டத்தோ ஜமாருல் கான்

போர்ட்டிக்சன்:

பணம் இருந்தாலும் அதைக் கொடுப்பதற்கு மனம் அனைவருக்கும் வராது.

அவ்வகையில் டத்தோ அப்துல் ஹமிட் சேவைக்கு எனது பாராட்டுக்கள் மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமாருல் கான் கூறினார்.

ஏசான் குழுமத்தின்  நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் ஒவ்வொரு ஆண்டும் நோன்பு பெருநாளை முன்னிட்டு அன்பளிப்புகளை வழங்கி வருகிறார்.

இன்றைய நிகழ்வு இவ்வாண்டின் அவர் நடத்தும் 27ஆவது நிகழ்வாகும். நாம் ஓரிரு நிகழ்வில் கலந்துக் கொண்டாலே அது அலைச்சலை ஏற்படுத்தும்.

ஆனால் இவர் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். நாளையும் பல இடங்களுக்கு சென்று உதவிகளை வழங்கவுள்ளார்.

இது தான் அவர் செய்யும் சேவையின் தனி மகத்துவம். அதுவும் தனது குடும்பத்தாருடன் இணைந்து தான் இச்சேவைகளை அவர் செய்து வருகிறார்.

டத்தோ அப்துல் ஹமிட்டை முன்னோடியாக கொண்டு அனைவரும் மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டும்.

பணம் அதிகம் இருந்தாலும் டத்தோ அப்துல் ஹமிட் போன்று கொடுக்கும் மன அனைவருக்கும் வர வேண்டும் என்று டத்தோ ஜமாருல் கான் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset