நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடிஆர் விசாவுக்கான கால அவகாசம்  நீட்டிப்பு: குடிநுழைவுத் துறை

புத்ராஜெயா:

அந்நியத் தொழிலாளர்களின்  விடிஆர் விசாவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய குடிநுழைவுத் துறை  ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு குடிநுழைவுத் துறையின் விடிஆர் Visa dalam Rujukan (VTR) விசாவை பெற்றிருக்க வேண்டும்.

FWCMS வாயிலாக இந்த விடிஆர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த விடிஆர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டா ரத்து செய்யப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப்  புதிய நடைமுறைக்கு 22 வர்த்தக இயக்கங்கள் அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விடிஆர் விசாவுக்கான கால அவகாசம் மேலும் 1 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அந்நிய தொழிலாளர்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி நாள் மே 31ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குடிநுழைவுத் துறை  கடிதம் வாயிலாக கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset