நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன நல வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, உடற்பயிற்சி கொடுப்பதே ஷைன் குழந்தைகள் மையத்தின் இலக்கு

சிரம்பான்:

மன நல வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, உடற்பயிற்சி கொடுப்பதே ஷைன் குழந்தைகள் மையத்தின் இலக்கு.

அக்குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஆண்டு விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்து பேசிய மையத்தின்  தலைமை  நிர்வாக இயக்கநர் சரஸ்வதி சுப்ரமணியம் இவ்வாறு குறிப்பிட்டார் 

மன நல வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள  குழந்தைகளின் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை கொடுத்து சொந்தமாக செயல்படும் நிலைக்கு உருவாக்குவதை  ஷைன் குழந்தைகள் மையம்  கடமையாக கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடவுளின் அன்புக் குழந்தைகளாக போற்றப்படும் இக்குந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதோடு பல தரப்பட்ட உடற்பயிச்சிகள் மூலம் சுயமாக  செயலற்றும் அளவிற்கு பக்குவத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
 
தற்போது  ஷைன் குழந்தைகள் மையம் சிரம்பான் 2 ஐட்ஸ், செத்திய ஆலாம் ஆகிய இரண்டு பகுதியில் 50 மேற்பட்ட  குழந்தைகளுக்கு அனுபவமிக்க 15 ஆசிரியர்கள் பயிற்சி வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஒன்றிணைந்து பங்கேடுக்கும் விளையாட்டு போட்டியில்  குழந்தைகள் அனைவருக்கு பரிசுகள் வழங்கி பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் நிகழ்வாக அமைந்தது என்று சரஸ்வதி சுப்ரமணியம் மேலும் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset