நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது.

இது சமுதாயத்திற்கு தான் பாதிப்பு என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.

குறிப்பாக சமூக ஊடகங்களின் தான் அதிகமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் உண்மையானதா என்பதை இந்திய சமுகம் முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காரணம் சமூக இடங்களில் வரும் பெரும்பாலான செய்திகளும் தகவல்களும் அவதூறாக தான் உள்ளது.

ஆகவே மக்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது அந்த தொகுதி மக்களுக்கான எனது வேண்டுகோள் என்று டத்தோ ரமணன் கூறினார்.

வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக விளங்குகிறது.

ஆகவே இந்த தேர்தலில் இந்திய சமூகம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சுங்கை பூலோவில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்கு பின் டத்தோ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset