நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம் 

உலு சிலாங்கூர்:

கோல குபு பாருவில் நடந்த சிலாங்கூர் மாநிலத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி விளக்கம் அளித்தார்.

இந்த திறந்த இல்ல விருந்துபசாரம் தேர்தல் குற்றச் சட்டம் 1954  மீறவில்லை. குறிப்பாக விழாவின் போது பிரச்சாரக் கூறுகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்த திறந்த இல்ல உபசரிப்புக்கான தேதி சுமார்  ஒரு மாதத்திற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பாக  கடந்த ரமலான் மாத தொடக்கத்தில் இருந்தே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் இது ஒரு பிரச்சாரக் கூட்டமோ, அரசியல் கட்சி நிகழ்வோ அல்ல. முழுக்க முழுக்க மலேசிய ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் எடுத்துக்காட்டும் பாரம்பரிய நிகழ்ச்சி என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset