நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை  இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா

கோலாலம்பூர் :

இந்திய அரசின் உயர் கல்வி  வாய்ப்புகளை  இழந்தால்
மீண்டும் கிடைக்காது.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா இதனை கூறினார்.

மலேசியா மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பல வாய்ப்புகளை வழங்குகிறது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்வி உபகார சம்பளத்துடன் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இந்த வாய்ப்புகள் கிடைக்கிறது.

இந்த வாய்ப்புகளை மலேசிய மானவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிடைக்கும் கல்வி வாய்ப்பு  இடங்களை முழுமையாக பூர்த்தி செய்யும் பட்சத்தில் வரும் காலங்களில் இன்னும் அதிகமான இடங்கள் கிடைக்கும்.

அதுவே பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் கிடைக்கும் வாய்ப்புகள் கூட வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும்.

ஆகவே இந்த விவகாரத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் மிகக் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இந்திய அரசின் கல்வி வாய்ப்புகள் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்களை தவிர்த்து அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுரேந்திரன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset