நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா

கோலாலம்பூர்:

இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதுவே எங்களின் இலக்கு என்று மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தின் கவுன்சிலர் சி. சுஷ்மா கூறினார்.

இந்தியாவில் உயர் கல்வி பயில உலகளாவிய மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.

குறிப்பாக இம் மாணவர்களுக்கு 75 முதல் 100% வரை கல்வி உபகார சம்பளத்தையும் இந்திய அரசு வழங்குகிறது.

அதே வேளையில் இந்தியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக்கழகங்களிலும் இந்த வாய்ப்பை மலேசிய மானவர்கள் பெறலாம்.

அடிப்படை உயர் கல்வி தொடங்கி பிஎச்டி பட்டப்படிப்பு வரை மாணவர்கள் இங்கு பயிலலாம்.

பல்வேறு துறைகளில் இந்த பட்டப் படிப்பை மாணவர்கள் பெறலாம்.

மலேசியா மாணவர்களுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகும். இருந்தாலும் இந்த வாய்ப்புகளை மலேசிய மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

இதன் அடிப்படையில்தான் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். 

இதுதான் எங்கள் இலக்கு என்று பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் கல்வி மையத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் சுஷ்மா கூறினார்.

இந்த கல்வி வாய்ப்புகள் குறித்த மேல் விவரங்களுக்கு https://hcikl.gov.in/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset