நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம் 

அலோர் ஸ்டார்: 

சமூக நல இல்லத்தில் 69 வயதுடைய தர்மலிங்கத்தைத் தாக்கிய 36 வயதான விக்னேஸ்வரிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

முதியவரைத் தாக்கிய குற்றச்சாட்டை அம்மாது ஒப்புக்கொண்டதால் சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம் விதித்து கூலிம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பினை நீதிபதி ஜமாலியா அப்துல் மனாப் வழங்கிய நிலையில் குற்றச்சாட்டு தமிழ்மொழியில் வாசித்த போது குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஸ்வரி குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தர்மலிங்கத்தை கட்டையைக் கொண்டு விக்னேஸ்வரி தாக்கியுள்ளார். இதனால் தர்மலிங்கத்திற்குக் காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தாமான் டேசா அமானில் நிகழ்ந்தது. 

குற்றவியல் சட்ட பிரிவு 324யின் கீழ் விக்னேஸ்வரி குற்றஞ்சாட்டப்பட்டார்.  இந்த விவகாரத்தை மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் JKM தரப்பு விசாரணை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் NANCY SHUKRI முன்னதாக தெரிவித்திருந்தார்.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset