நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தை சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட  வேண்டும்:  இந்து மகா சபா கோரிக்கை

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தை சட்டப்பூர்வமாக பராமரிக்கும் பொறுப்பு இந்து மகா சபாவுக்கு மட்டுமே உள்ளது என்று இன்று அறிவிக்கப்பட்டது.

ஆலயத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் நபர் ஒருவர்  2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கோவில் கணக்கை முறையாக காட்ட வேண்டும்.

இந்து மகா சபா வுக்கு உதவி புரிய முன் வந்திருக்கும் நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனைத் தெரிவித்தார்.

மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடந்த சலசலப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தை தனது சொந்த குடும்ப கோவிலாக உருவாக்கி இருக்கும் ஒரு தரப்பினர்  அன்று ஒரு கட்டமைப்பை உருவாக்கி கலாட்டா நடந்துபோல்  ஒரு சம்பவத்தை உருவாக்கி  அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளனர்.

முன்பு இவரின் விண்ணப்பத்தை ஆர்ஓஎஸ் நிராகரித்தது. ஆனால் இப்போது இவரின் விண்ணப்பத்தை திடீரென ஆர்ஓஎஸ் அங்கீகரித்து அனுமதி வழங்கியது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

கோவில் வருமானம் அனைத்தும் அவர் சொந்த வங்கி கணக்கில் சேர்த்துள்ளார்.

கோவில் வருமானத்தை முறையாக காட்டாத அவர் எப்படி தலைவர் ஆனார் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

முறையாக பதிவு செய்யப்பட்ட இந்து சபா மகா இந்த பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது என்பதால் ஆர்ஓஎஸ் மற்றும் போலீசார் ஆலயத்தை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே இது தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் மற்றும் ஆர்ஓஎஸ் -க்கு இந்து மகா சபா மகஜரை வழங்கி உள்ளது என்று சிவன் கோயில் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.

மார்ச் 12 ஆம் தேதி கோவிலில் அத்துமீறி நுழைந்தவர்கள் கோவிலை அபகறித்து கொண்டார்கள்.

கோவிலில் வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும்  சொந்த வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது சட்டப் படி குற்றமாகும் என்று அவர் சொன்னார்.

பதிவு செய்யப்பட்ட இந்து மகா சபாவிடம் அதன் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset