நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் காலுறை விவகாரம்: சுல்தான் நஸ்ரின் கவலை 

பெட்டாலிங் ஜெயா:

பேராக், பீடோரிலுல்ள கேகே சூப்பர் மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இனக் கலவரம் ஏற்படக் கூட சாத்தியம் இருப்பதாக பேராக் மாநிலச் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா எச்சரித்துள்ளார்.

அல்லாஹ் வார்த்தை அச்சிடப்பட்ட காலுறை கேகே சூப்பர்மார்ட்டில் விற்பனை செய்யப்பட்ட விவாகரம் நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. 

கடந்த செவ்வாய்கிழமை பீடோரிலுல்ள கேகே சூப்பர் மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு காரணமானவர்கள் அக்கடையின் சிசிடிவி கேமாரா வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில் சந்தேக நபரைக் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதனால், நாட்டில் இனக் கலவரத்தைத் தடுக்க உறுதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்துயுள்ளதாக அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஜாஹிடி ஜைனுடின் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மலேசியர்கள் அமைதிக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் என்று சுல்தான் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்கள் சமமாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

இதனால் அவர்கள் தொடர்ந்து அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset