நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லஞ்சம் வாங்கிய 34 அரசு ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்தது

சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோவில் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 4.7 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சம் பெற்ற நடவடிக்கையில் எம்ஏசிசி அரசு ஊழியர்களைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மார்ச் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

கேஎல்ஐஏ கார்கோவில் கடத்தப்பட்டதன் விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளில் 2 பில்லியன் வரி இழப்பு ஏற்பட்டதாக அசாம் பாக்கி கூறினார். 

சம்பந்தப்பட்ட கணக்குகள் உட்பட மொத்தம் 231 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 17 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை உள்ளடக்கியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset