நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்  விமரிசையாக நடைபெற்றது

உலுசிலாங்கூர்: 

57 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய  மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

20க்கும் மேற்பட்ட குருக்கள் ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓதி காலை 9.58 மணிக்கு கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, டத்தோ பி.எஸ்.சாமி, உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து , ராஜேஸ், மஇகா உலுசிலாங்கூர் தொகுதி தலைவர் பாலசுந்தரம் உட்பட பலரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இன்று வேலை நாட்களாக இருந்தாலும் அதிகமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.

இங்குள்ள மக்களுக்கு ஒரு தாய் கோயிலாக விளங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது வெறும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.

ஐந்தாவது முறையாக மகா கும்பாபிஷேகம் கண்டிருக்கும் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தினரின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன் என்று கவுன்சிலர் புவனேஸ்வரன் தெரிவித்தார்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கவுன்சிலர்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ஆலய சார்பில் ஆலய தலைவர் பாலசந்திரன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மகா கும்பாபிஷேகத்திற்கு பின்னர் பிற்பகலில் மகேஸ்வர பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்பட்டது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset