நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடிப்படை செயல் திட்டத்தைத் தொடங்கியது மலேசிய குழந்தைகள் புற்றுநோய் சங்கம் 

கோலாலம்பூர்: 

CCAM எனப்படும் மலேசிய குழந்தைகள் புற்றுநோய் சங்கம் 2022ஆம் ஆண்டு  லாவண்யா அவர்களால் நிறுவப்பட்டது.  

தமது  குழந்தைக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு,  எதிர்கொண்ட சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்  இச்சங்கத்தைத் தோற்றுவித்தார்.

அவரது மகள் மஹியா பாலா, புற்றுநோயுடன் போராடியப் போது, லாவண்யா, புற்றுநோய்க்கான விலையுயர்ந்த சிகிச்சைகள் குறித்து அறிந்து கொண்டார்.

இதன் காரணமாகப் பல குழந்தைகள் தங்களது வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதையும் அறிந்தார்.

அதன் அடிப்படையில்தான் மலேசியக் குழந்தைகள் புற்றுநோய் சங்கத்தைத் தோற்றுவித்தார்.
    
மலேசியாவில் புற்றுநோயை எதிர்கொள்ளும் குழந்தைகளின் பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைப்பதுதான் இந்தச் சங்கத்தின் முதன்மை நோக்கம் என லாவண்யா குறிப்பிட்டார்.

அதோடு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் தொடர்புடைய சிகிச்சைகளுக்கு அதீத செலவுகளால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு, திவாலாகும் நிலையில் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெற்றோர்களின் நிதிச் சுமையை உணர்ந்து தொண்டு நிறுவனங்கள் உதவி, நிதி திரட்டும் நிகழ்ச்சி உட்படப் பல்வேறு முயற்சிகளை இச்சங்கம் முன்னெடுக்கின்றது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதிகளைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சை செலவுகள், காப்பீடு, அரசாங்கத் திட்டத்தின் மானியத்தில் அடங்காத மருந்துகளை வாங்குவதற்கு அர்ப்பணிக்கப்படுமென்பதையும் லாவண்யா உறுதிப்படுத்தினார்.

இம்மாதிரியான நடவடிக்கைகளில் மூலம், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக எந்தக் குழந்தையும் உயிர்காக்கும் சிகிச்சையை இழக்காமல் இருப்பதை மலேசியக் குழந்தைகள் புற்றுநோய் சங்கம் உறுதி செய்யுமென்றார் அவர்.

இதனிடயே இந்த மாபெரும் நடவடிக்கையை அண்மையில் ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்நிலையில் குழந்தை புற்றுநோய் துறையில் சிறந்த அர்ப்பணிப்பு, நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய 6 பேருக்கு அன்றைய நாள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset