நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பந்திங்கில் இறுதிசடங்கின் ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடிக்க செய்த ஆடவர் போலீசாரால் கைது 

ஷா ஆலாம்: 

பந்திங்கில் இறுதிசடங்கின்  ஊர்வலத்தில் ஆடவர் ஒருவர் பட்டாசுகளை வெடிக்க செய்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

சவ ஊர்வலத்தின் போது பந்திங்கில் உள்ள சாலைகளின் நடுவே பட்டாசுகளை வெடிக்க செய்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கோல லாங்காட் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டட் அஹ்மத் ரித்வான்ன் முஹம்மத் நோர் கூறினார். 

பிற்பகல 3.30 மணியளவில் 28 வயதான அவ்வாடவர் கைது செய்யயப்பட்டார்.  கைது செய்யப்பட்ட ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டாரா இல்லையா குறித்து பரிசோதனை நட்டத்தப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட நபர் சாலையிலுள்ள வாகனங்களுக்கு நடுவே பட்டாசுகளை வெடித்து பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.  

1957ஆம் ஆண்டு வெடிப்பொருள் வைத்திருக்கும் சட்டம், 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset