நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸம்ரி வினோத்திற்கு எதிராக நடவடிக்கை அவசியம்: ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ தினாளன் வேண்டுகோள் 

கோலாலம்பூர்: 

இந்து சமயத்தையும் இந்துக்களையும் இழிவாக பேசிய சர்ச்சைக்குரிய மதப்போதகர் ஸம்ரி வினோத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ தினாளன் ராஜகோபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஸம்ரி வினோத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் ஸம்ரி வினோத்திற்குக் காவல்துறையினர் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசியிருக்கும் ஸம்ரி வினோத் குறைந்தது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

3R யின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனையை விதிக்க செய்ய வேண்டும். மூவினம் ஒற்றுமையாக வாழும் மலேசிய திருநாட்டில் இந்த மாதிரியான செயல்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்க செய்கிறது என்று டத்தோ தினாளன் கூறினார். 

ஸம்ரி வினோத், கணேஸ்பரன் போன்ற  நபர்களால் தான் மலேசியாவின் ஒற்றுமைக்கு மாபெரும் இழுக்கு ஏற்படுகிறது. ஆக, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரும் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset