நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை: நிக் நஸ்மி

கோலாலம்பூர்:

நாட்டிலுள்ள 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை.

இயற்கை வளங்கள், இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி கூறினார்.

சபாவில் உள்ள இரண்டு மாவட்டங்களான லஹாத் டத்து,  பாப்பர் ஆகிய பகுதிகளில் முறையே 29, 28 நாட்களுக்கு வறண்ட பூமியாக உள்ளது.

லங்காவியில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக மழை இல்லை.

கிளந்தான் பாசிர் பூத்தே 21 நாட்கள், சபா கோத்தா பெலுட், கோத்தா கினபாலு, பூத்தாம் 19 நாட்கள், லாபுவான் 18 நாட்களாக பெய்யவில்லை.

அதே போல் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெலுபு, போர்ட்டிசனில் கடந்த 17 நாட்களாக மழை பெய்யவில்லை.

மற்றொரு மாநில ஆறு மாவட்டங்களில் 16 நாட்களுக்கு மழை பெய்யவில்லைவ்

ஜொகூரில் உள்ள மூவார், கிளந்தானில் உள்ள ஜெலி, கோத்தாபாரு, கோல கெராய், பகாங்கில் தெமர்லோ, பெர்லிசில் சுபிங் ஆகிய மாவட்டங்கள் அதில் அடங்கும்.

மேலும் 41 மாவட்டங்கள் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset