நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி

உலு சிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்.

பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் இதனை தெரிவித்தார்.

இத்தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் நாளில் பாஸ் தலைவர் இல்லாதது குறித்து கெஅடிலான் கட்சியின்   தகவல் பிரிவுத்  தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக இந்த தேர்தலை பாஸ் கட்சி புறக்கணிக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஃபாஹ்மி சொல்வதைக் கேட்க வேண்டாம் என்று ஊடகங்களையும் மக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அன்றைய தினம் பெர்லிசில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பாஸ் கட்சியின்ர் கலந்துக் கொண்டனர்.

அதனால் தான் அக்கட்சியினர் அன்று வரவில்லை.

இருந்தாலும் பாஸ் கட்சியினர் விரைவில் பிரச்சாரத்தில் இணைவார்கள்.

தேசியக் கூட்டணி வேட்பாளர் கைருல் அஸ்ஹாரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset