நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை

ரியாத்:

மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனைப்படைத்துள்ளார்.

மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் சவூதிக்கு  வந்த முதல் முஸ்லீம் அல்லாதவர் என்ற பெருமையை பெற்றதுடன்,

இறுதியாக மதீனா பூமியில் கால் பதிக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என்றார் அவர்.

37 வயதான அவர் ஹோண்டா ஆர்எஸ் 150சிசி மோட்டார் சைக்கிளில் சவூதி அரேபியா வந்தடைந்தார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, நேப்பாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைக் கடந்து  அவர் இங்கு வந்துள்ளார்.

குறிப்பாக மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை 40 நாட்களில் இங்கு  வந்தடைந்தார்.

மலேசியாவில் இருந்து கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற சொந்த வாகனங்களை ஓட்டிய பல நண்பர்களுடன் வந்தேன்.

ஆனால் நேபாளத்தின் காத்மாண்டுவில் தொடங்கி சவூதி அரேபியாவுக்கு தனியாக பயணம் செய்தேன்.

அடுத்த நான்கு நாட்களுக்கு இங்கு இருப்பேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset