நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்

பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவின் சுற்றுலாத் துறை மேலும் ஐந்து ஆசியான் நாடுகளுடன் விசா திட்டத்தில் இணைந்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார ஆபத்தில் சமரசம் செய்யாமல் இருக்க, சம்பந்தப்பட்ட நாடுகளைக் கவனமாக மதிப்பீடு செய்ய ஒரு பாதுகாப்பு நிபுணர் அழைப்பு விடுத்தார்.

தாய்லாந்தால் முன்மொழியப்பட்ட கூட்டு விசா திட்டம், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கும்.

இந்த முன்மொழிவைப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி வில்லியம்ஸ் வரவேற்றார்.

அவர் அத்தகைய முயற்சியின் மூலம் ஆசியான் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நீண்ட காலத் தாமதமாகிவிட்டதாகக் கூறினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை எளிதாக அணுகுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் நீண்ட விடுமுறைகளைத் திட்டமிடலாம்.

மலேசியா 2019-ஆம் ஆண்டில் 26.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு, 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு வந்துள்ளனர்.

ஆசியான் கூட்டு விசாவைத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் முன்மொழிந்தார்.

முன்னதாக, இந்தத் திட்டத்தை பரிசீலிக்க மலேசியாவுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset