நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்கள் தவறான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால்  ராமசாமி தான் பொறுப்பேற்க வேண்டும்: டத்தோ ரமணன்

பத்தாங்காலி:

கோல குபு பாரு வாக்காளர்கள் தவறான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியர் ராமசாமி தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதனை கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு உரிமையின் தலைவர் ராமசாமி, நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறார்.

இதை சொல்லி விட்டு ராமசாமி பினாங்கு மாநிலத்திற்கு சென்று விடுவார்.

ஆனால் அவரின் பேச்சைக் கேட்டு தவறான வேட்பாளரை இங்குள்ள வாக்காளர்கள் தேர்வு செய்து விட்டால் அவர்களின் எதிர்காலத்திற்கு அவர் பொறுப்பேற்பாரா என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.

ஒரு வேளை அரசாங்க பிரதிநிதி இல்லாத வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில்,

இங்குள்ள மக்களுக்கு அவரால் உதவி செய்ய முடியவில்லை என்றால், ராமசாமி அவர்களுக்கு உதவுவாரா?

இப்போது பல நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு இல்லை.

அதனால் உதவ முடியவில்லை என மக்களுக்கு காரணம் கூறி வருகின்றனர்.

ஆகவே இதுபோன்ற விவகாரங்களை வாக்காளர்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.

பத்தாங்காலியில் நடைபெற்ற வணக்கம் மடானி கலந்துரையாடல் நிகழ்வுக்கு பின் டத்தோ ரமணன்  செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset