நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவு பேருந்து தடம் புரண்டது: காராக் நெடுஞ்சாலையில்  மோசமான நெரிசல்

கோம்பாக்:

விரைவு பேருந்து தடம் புரண்டதில் காராக் நெடுஞ்சாலையில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து  காராக் நெடுஞ்சாலையில் 51.4 கிலோ மீட்டர் புக்கிட் திங்கி - லென்டாங்கிற்கு அருகே நிகழ்ந்தது.

எல்பிடி நெடுஞ்சாலை நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் இன்று காலை 8.13 மணியளவில் விபத்து நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சம்பவ பகுதியில் உள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset