நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலீட்டு விவகாரங்களில் தூதர்கள் சிறந்து விளங்க வேண்டும்: ஹசான்

கோலாலம்பூர்:

வெளிநாட்டில் உள்ள மலேசியத் தூதர்கள், உயர் பொறுப்பில் இருக்கும் பிரதிநிதிகள் நாட்டிற்குள் முதலீட்டைக் கொண்டு வர வர்த்தக அம்சங்களில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமத் ஹசான் இதனை வலியுறுத்தினார்.

மற்ற நாடுகளுடன் நல்ல இருதரப்பு உறவுகளை பாதுகாப்பது அவர்களின் முதல் பணியாக உள்ளது.

இருந்தாலும் அவர்கள்  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீடு, வர்த்தகத்தை ஆராய்ந்து ஈர்ப்பதில் திறன்களை பெற்றிருப்பது அவசியமானது.

முடிந்தவரை பல முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சிரம்பானில் நடந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset