நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் கனமழை: மரங்கள் சாய்ந்ததில் 3 வீடுகள், 16 வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர்:

தலைநகரில் பிற்பகல் பெய்த கனமழை, பலத்த காற்றைத் தொடர்ந்து மரங்கள் சாய்ந்ததில் 16 கார்கள், மூன்று வீடுகள் மோசமாக சேதமடைந்தன.

கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

அனைத்து சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறினார்.

மாலை 6 ஆறு மணி தொடங்கி ஒரு மணி நேரம் கனமழையுடன் பலத்த காற்று வீசியது.

இதன் காரணமாக புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் மரம் விழுந்து ஐந்து கார்கள் சேதமடைந்தன.

மேலும் தமான் தாசிக் டாமாய் இரண்டு கார்களை சேதமடைந்தன.

ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ராடின், ஜாலான் ராடின் அனும் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவம் மூன்று கார்களுக்கு சேதமடைந்தன.

மேலும் இரண்டு கார்கள் வியாபாரிகளின் கூடாரங்கள் காற்றில் பறந்து சேதமடைந்தன.

குறிப்பாக பண்டர் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள இரண்டு வீடுகளுக்கும், தாமான் சாலாக் செலாட்டனில் உள்ள ஒரு வீடும் மரம் விழுந்ததில் சேதமடைந்தன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset