நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா 

சென்னை: 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. நடிகர் சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜும் முதன்முறையாக இணைந்துள்ளனர். 

இந்த தகவலை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் கோடைக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய தொடக்கம், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று நடிகர் சூர்யா சுவரொட்டியுடன் பதிவிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்த வேளையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து புறநானுறு திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த திரைப்படம் தாமதமாகும் என்று சுதா கொங்கராவும் சூர்யாவும் கூட்டாக அறிவித்திருந்தது. இதன் நடுவே இந்த புதிய அறிவிப்பு வெளியானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset