நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஎஸ் ஜூவல்லர்ஸ்,  பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு 

ஈப்போ:

பெருநாள் காலங்களில்  ஆதரவற்றவர்கள்  மற்றும்  முதியோர்கள் இல்லங்களில் உள்ளவர்கள்  மகிழ்ச்சியுடன் கொண்டாட  பொது இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் உதவிகள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் தம்புனில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு நோன்பு திறந்து பெருநாள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி ஈப்போவில்  கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை  டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா ட்ரான்சிட் பெர்ஹாட் நிறுவனம் வருடாந்திர நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது .

இந்தத் நிகழ்வு ரமலான் மற்றும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு அவர்களுக்கு  மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து வருவதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழு தர தலைவரும் பேரா மாநில நகைக் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவருமான  டத்தோ அமலுதீன் முஹம்மது இஸ்மாயில் கூறினார்

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த நிகழ்வை  நடத்துகிறோம், உள்ளடக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் ஆண்டிலும் இந்த பாரம்பரியத்தை தொடருவோம் என்றார்.

இந்த நோன்பு துறப்பு விழா, டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடத்தப்படும் என்று நிகழ்விற்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்

நாட்டில் பொருளாதாரம் சிறப்படைய வேண்டும். தொழில் துறைகள் சிறப்படைந்தால் அடுத்தடுத்து ஆண்டுகளில் மேலும் அதிகமான உதவிகள் வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் பேரா ட்ரான்சிட் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ சியோங் பீக் சூயியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset