நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புழுக்கள் கொண்ட நாசி கெராபு ரமலான் சந்தையில் விற்கப்பட்டது அல்ல

கோலபிலா: 

புழுக்கள் கொண்ட நாசி கெராபு ரமலான் சந்தையில் விற்கப்பட்டது அல்ல.

கோலபிலா நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் பைசால் அப்துல் மனாப் கூறினார்.

கோல பிலா டத்தாரான் மெலாங் ரமலான் சந்தையில் புழுக்கள் கொண்ட நாசி கெராபு விற்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் கோல பிலா மாவட்ட சுகாதார இலாகா சோதனைகளை மேற்கொண்டது.

நாசி கெராபு விற்பனைக்கான நான்கு லோட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு மட்டும் செயல்பட்டன.

அக்கடையில் புதிய உணவுகள் தான் விற்கப்படுகிறது. பழைய உணவு ஏதும் இல்லை.

குறிப்பான உணவை பொட்டலம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் வேறுப்பட்டது.

ஆகவே சம்பந்தப்பட்ட நாசி கெராபு இந்த சந்தையில் விற்கப்பட்டது அல்ல என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset