நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள சீன மக்கள் ஜசெக கட்சி மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.

இருந்தாலும் அச்சத்தின் அடிப்படையில் அக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர் என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.

தேசிய கூட்டணி குறிப்பாக பாஸ் கட்சிக்கு எதிராக சீன வாக்காளர்களை பயமுறுத்தும் தந்திரத்தை ஜசெக தொடர்ந்து கையாண்டு வருகிறது.

இதனால் சந்தேகங்கள் இருந்த போதிலும் நம்பிக்கை கூட்டணியின் கூட்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை, தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை போன்ற காரணங்கள்  ஒற்றுமை அரசாங்கத்திற்கு பின்னடவை உருவாக்கியுள்ளது.

இதனால் தான் ஜசெக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தனர். சமூக மக்களிடையே இந்த உணர்வு பரவலாக உள்ளது.

ஆனால் வாக்களிக்கும் போது நிலைமை மாறுகிறது.

குறிப்பாக வாக்களிப்பதில் தவறு செய்தால், பச்சை அலைக்கு அதிகாரம் கொடுப்பீர்கள் என மக்களை பயமுறுத்துகிறார்கள்.

இந்த யுக்தி கடந்த 15ஆவது பொதுத் தேர்தல் முதலே கையாளப்பட்டு வருகிறது.

கைரியின் கெலுவார் செகஜாப் நிகழ்வில் பேசிய வீ கா சியோங் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset