நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறன் பயிற்சித் திட்டங்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட்; இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும்: மைக்கி

கோலாலம்பூர்:

திறன் பயிற்சித் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிய 30 மில்லியன் ரிங்கிட் நிச்சயம் இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும்.

மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.

14 மாநிலங்களின் பிரதிநிதித்துவம், 17 வர்த்தக சங்கங்கள் என கிட்டத்தட்ட 30 வர்த்தக சமூதாயத்துடன் மைக்கி செயல்பட்டு வருகிறது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அறிவித்த இந்தியர் திறன் பயிற்சித் திட்டத்தை மைக்கி வரவேற்கிறது.

மேலும் மலேசிய இந்திய இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த திட்டம் வித்திடும் என மைக்கி நம்புகிறது.

2022 பிரதமராக பதவியேற்ற பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் மடானி அரசாங்கத்தின் மற்றொரு மகத்தான திட்டம் இதுவாகும். 

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், நிதியமைச்சு, எச்ஆர்டி கோர்ப், மித்ரா இந்த முயற்சியை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

இவ்வேளையில் அவர்களுக்கும் மைக்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

அதே வேளையில் இந்த நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, 

மலேசியாவில் உள்ள இந்திய இளைஞர் சமூகத்தின் திறன்களை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

அதே வேளையில் இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் பெறும் திட்டங்கள் வெற்றி பெற மைக்கி எப்போதும் அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் என்று டத்தோஶ்ரீ கோபால கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset