நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் ஹமாஸ்க்கு நிதி சேகரிப்பதையும், பணத்தை மாற்றுவதையும்  நிறுத்த அமெரிக்கா முயற்சி

கோலாலம்பூர்:

ஹமாஸ்க்கு  நிதி திரட்டுவதற்கும் பணத்தை மாற்றுவதற்குமான இடமாக மலேசியா மாறுவதைத் தடுக்க வாஷிங்டன் முயற்சிப்பதாக அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க கருவூலத்தின் பயங்கரவாதம், நிதி உளவுத்துறையின் துணைச் செயலாளரான பிரையன் நெல்சன்,

மலேசியாவை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர்களைச் சார்ந்து ஈரானின் எண்ணெயை வளத்தையும் வாஷிங்டன் கவனித்து வருகிறது என்றார்.

சிங்கப்பூரில் இது குறித்து பேசிய  நெல்சன், விரைவில் மலேசியாவுக்கு வருவார்.

இந்த வருகை தென்கிழக்கு ஆசியா வழியாக நிதியளிப்பதில் தனது கவனத்தை அதிகரிப்பதுடன்,

நிதி திரட்டும் முயற்சிகள், ஈரானிய எண்ணெயின் சட்டவிரோத விற்பனை உட்பட பல விவகாரங்களை அடிப்படையாக இருக்கும் என்று ராயட்டர்ஸ் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset