நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் கெஅடிலான் பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லையா?; தவறான குற்றச்சாட்டு: டாக்டர் சத்தியபிரகாஷ்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவில் கெஅடிலான் கட்சி பிரச்சாரங்களில் முழுமையாக பங்கேற்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.

உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் இதனை கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் போஸ்டர் பாய் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் பிரச்சாரம் குறைவாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் அதில் எந்த அர்த்தமும் இல்லை.

அது தகவலில் எந்த உண்மையும் அல்ல. வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம்.

குறிப்பாக நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் பாங் சோக் தாவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கெஅடிலான தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

நிதி பற்றாக்குறையின் காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இது தொடர்பில் விளக்கமளித்த டாக்டர் சத்தியபிரகாஷ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset