நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் வழக்கில் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் ஆசிரியர் தண்டிக்கப்படுவார்: கல்வி அமைச்சர்   

கோலாலம்பூர்: 

மலேசியக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) சமீபத்தில் வைரலான வழக்கில் ஆண் மாணவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண் ஆசிரியை மீது போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியை எந்த மாணவருடனும் தொடர்பு கொள்ள தற்போதைக்கு அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணையை முடித்த பிறகு பெண் ஆசிரியை மீது அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.

அதுவரை, விசாரணை முடியும் வரை நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் கல்வி அமைச்சு பின்பற்றுவதாகவும் அவர் கூறினார். 

ஆண் மாணவர்களுக்குக் கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முழு உளவியல் ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதையும் கல்வியமைச்சு உறுதிப்படுத்தினார். 

நேற்று, செப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப், 37 வயது பெண் ஆசிரியையின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset