நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட், விற்பனை நிறுவன இயக்குநர்கள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்

கோலாலம்பூர்:

அல்லாஹ் காலுறை விவகாரத்தின் கேகே மார்ட், விற்பனை நிறுவன இயக்குநர்கள்  மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

இதனை சட்டத்துறை தலைவர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

கேகே மார்ட், விற்பனையாளர் ஷின் ஜியான் சாங் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டவுள்ளது.

இரண்டு நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கும் என்று சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

கேகே மார்ட், அதன் இயக்குநர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அல்லாஹ் என்ற வார்த்தையுடன் காலுறைகளை விற்றதன் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஷின் ஜியான் சாங், அதன் இயக்குநர்கள் சாக்ஸ் சப்ளையர்களாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 298,  109 இன் கீழ் ஷாஆலம் அமர்வு நீதிமன்றத்தில் கட்சியினர் மீது நாளை காலை குற்றம் சாட்டப்படும்.

பிரிவு 298 குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அதே சமயம் பிரிவு 109 முக்கியக் குற்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனையை தூண்டுபவர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

: பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset