நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்; இதுவரை யாரும் கைதாகவில்லை: டத்தோஸ்ரீ முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி

ஈப்போ:

பேரா  மஞ்சோங் ஆயர் தாவாரில்  வீடமைப்பு ஊராட்சித்  துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் பெற்றோரின் வீட்டுக்கு முன்னால்  கடிதம் வாயிலாக மிரட்டல விடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மார்ச் 7 முதல் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக 11 சாட்சிகளின் உரையாடல்களை பதிவு செய்துள்ளது என்ரு பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்

நாங்கள் இன்னும் விசாரணையைத் தொடர்கிறோம். கோர் மிங்கின் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாரைக் கொண்ட 11 நபர்களின் உரையாடல்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

 சம்பவம் நடந்த இடத்தில்  வீடியோ பதிவையும் (சிசிடிவி), மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீசார் சோதனை செய்தனர்.

இங்கு  பேராக்  போலீஸ் தலைமையகத்தில்  நடைபெற்ற 217ஆவது போலீஸ் தின  நிகழ்விற்குப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

யாரும் கைது செய்யப்படவில்லை. தகவல் அறிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கொண்டார்

கோர் மிங்கின் தாயிடமிருந்து மிரட்டல் கடிதம் குறித்து தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.  அந்த கடிதத்தில் ஜங்கான் ஜபார் இஸ்லாம் என்று மிரட்டல் விடப்பட்டிருந்தது.

 அநாமதேய தகவல்தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டலுக்காக குற்றவியல் சட்ட  பிரிவு 507 கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணக மேற்கோள்ளப்படுகிறது.

 படி வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் மொஹமட் நோர்டின் கூறினார்.

 இதற்கிடையில், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்த. அதிகாரப்பூர்வ வாகனம் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டு பிப்ரவரி 28 தேதி டி.பி. பி. அலுவலகத்திற்கு  அனுப்பப்பட்டதாக டத்தோஸ்ரீ முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset