நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிஜே செக்ஷன் 19 மாரியம்மன் ஆலயம்  கட்டப்படுமா இல்லையா?: சுற்றுவட்டார மக்கள் கேள்வி

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங்ஜெயா செக்சன் 19 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்படுமா இல்லையா என்று அப் பகுதி வாழ் மக்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ஆலயத்தின் நிர்வாக பொறுப்பை ஒரு தரப்பினர் ஏற்ற பிறகு இந்த பிரச்சினைகள் நிலவுகின்றன. 

ஆலயத் திருப்பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு இதுவரையில் இன்னும் நிறைவு பெறவில்லை. 2009ஆம் ஆண்டு முதல் இந்த கட்டுமானப் பணிக்காக மூன்று முறை நிதி திரட்டும் விருந்தோம்பல் நடத்தப்பட்டது.

ஆனாலும் கட்டுமானப் பணிகள் இதுவரையில் நிறைவு பெறவில்லை. இதுகுறித்து இந்த பகுதிவாழ் மக்கள் பலமுறை கேள்வி எழுப்பினாலும் அதற்கு நிர்வாகத் தரப்பிடம் இருந்து முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை. 

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் இதுபோல் ஒன்றுகூடி நாங்கள் கேள்வி எழுப்பினோம். இதுநாள் வரை எங்களுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இந்தப் பகுதியில் முன்னதாக நாங்கள் வசித்த கிராமத்திற்கு இந்த ஆலயம் மிகப் பெரிய அடையாளம். ஆனால் தற்போது திருப்பணிகள் நிறைவு பெறாததால் இந்த ஆலயத்திற்கு வரமுடியாத சூழல் ஏற்படுகின்றது. அதிலும் இதுபோல் கேள்வி எழுப்ப முன்வந்தால் ஆலய முன்கதவிற்கு பூட்டுப் போடப்படுகின்றது.
 
இந்த பகுதியில் வசித்த எங்களுக்கே ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றால் பின்னர் யாரைத்தான் அனுமதிப்பீர்கள் என்று  எம்.சிவா கேள்வி எழுப்பினார்.

அதேசமயம் இந்த ஆலய நிர்வாகத்தரப்பினருக்கும் எங்களுக்கும் எந்தவொரு தனிப்பட்ட பகையும் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை.  

ஆகவே  இந்த நிர்வாகத்தின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். இந்த பகுதிவாழ் மக்கள் என்ற முறையில் எங்களின்  கேள்விக்கு ஆலய நிர்வாகத்தினர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். எதற்குமே சரிவரவில்லை என்றால் அவர்கள் தரப்பில் ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்றுதானே அர்த்தம். 

நாங்கள் இனியும் பொறுமை காக்க மாட்டோம். சட்டப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்க முனைவோம். முறைப்படி ஆண்டு   பொதுக்கூட்டத்தை நடத்தவும் சட்டவிதிகளுக்கு நடவடிக்கைள் மேற்கொள்வோம் என்று அவர் கூறினார். 

கிட்டத்தட்ட 100க்கும் மேற்றப்பட்டவர்கள் நேற்று ஆலயத்திற்கு முன் கூடி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset