நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது

கோடம்பாக்கம்:

முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். 

இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS  தயாரித்து, இயக்குகிறார். 

இந்திய திரையிசையிலும் நடனத்துறையிலும் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகிறது.

இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் நம்பப்படுகிறது.

இத் திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், "சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்றார். 

நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, "நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். 

யோகி பாபு அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான், பிரபுதேவா பெயர்களை இணைத்து #arrpd6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் - இந்தியா படமாக திரைக்கு வர உள்ளது.

- சினிமா செய்திப் பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset