நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்

சென்னை:

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். 

அதில்  அடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் தாம் நடிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய தான் ராகவா லாரன்ஸை எப்படியாவது இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியதாகப் படை தலைவன் திரைப்படத்தின் இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார். 

இத்திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிடக் காட்சிக்கு மட்டுமே இடம் இருந்த நிலையில் எந்த யோசனைக்கும் இடம் தராமல் தாம் நடிக்க தயார் என்று ராகவா லாரன்ஸ் கூறியதை அன்பு நினைவு கூர்ந்தார். 

எவ்வளவு நிமிடம் தான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் தான் இருப்பதே மகிழ்ச்சி என்றார் ராகவா லாரன்ஸ்வ்

கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது  ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

மேலும், தயாரிப்பாளர்,மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்தச் சம்பளமும் எனக்கு வேண்டாம், 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்தால் போதும் என்றார். 

ராகவா லாரன்ஸ் அவர்களின் இந்த அணுகுமுறை  படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. 

இந்த மகிழ்வான செய்தியை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துவதில் படக் குழுவினர்  பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் இயக்குநர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset