நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகுதியான மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு; யூபியூ உறுதி: டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்:

நாட்டில் தகுதியான மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்பு வழங்கப்படும் என யூபியூ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனை செனட்டர் டத்தோ சிவராஜ் கூறினார்.

யூபியூ எனப்படும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவை ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பது வழக்கம்.

அவ்வகையில் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் நஜீப், நடவடிக்கை பிரிவுத் தலைவர் ரூடி ஆகியோரை சந்தித்தேன்.

இச்சந்திப்பின் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன்.

அவர்கள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். தகுதியான மாணவர்கள் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

மேலும் ஆண்டுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் அனைத்து பாடங்களில் ஏ பெறுகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் முதல் 5 பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது சிரமம் தான்.

மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக், சமூக கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆகவே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது முறையாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று டத்தோ சிவராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset