நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா

சென்னை: 

மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

நடிகர் தனுஷ் இளையராஜாவாகத் தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினைத் துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினைத் தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ்  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார். 
 
இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம். தனது சிறுவயதிலிருந்தே, மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் ரசிகன். 

நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும் போது அவை நிறைவேறும் என்றார் நடிகர் தனுஷ். 

இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார். 

மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் பல தசாப்தங்களாக தனது  நட்பைத் தொடர்ந்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன், ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

குணா திரைப்படத்தின் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடலில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார் நடிகர் கமலஹாசன். 

அந்தப் பாடல் எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் மற்றும் உணர்ச்சிகளின் அழகான பரிமாற்றம் என்றார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அழகாகவும் நேர்த்தியாகவும் சித்தரிக்க நடிகர் தனுஷுக்குக் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ரெட்ரோ போஸ்டரை, உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கியது சினிமாவில் ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset