நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோதுமை மாவுக்கான உதவிதொகை இந்தாண்டோடு முடிவடைகிறது: அர்மிசான்

ஷா ஆலம்:

இந்த ஆண்டோடு கோதுமை மாவுக்கான உதவிதொகை நிறுத்தப்படுவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்தார்.

உற்பத்தியாளர்கள் ஒரு கிலோகிராம் 1.45 வெள்ளி என்ற கட்டுப்பாட்டு விலையில் கோதுமை மாவு உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் இந்தக் கோதுமை மாவுக்கான உற்பத்தியைத் தொடர முடியாது.

அரசாங்கத்தால் வழங்கப்படும் மானிய விலையிலான சர்க்கரை, மாவு, பெட்ரோல் போன்றவற்றை வெளிநாட்டவர்கள் எப்போது அனுபவிக்க முடியும் என்று செவ்வாயன்று மந்த்ஸ்ரி நாசிப்பின் வாய்மொழி கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஏனெனில், மலேசியர்களின் சுமையைக் குறைக்க உதவுவதே உதவித்தொகை வழங்குவதன் நோக்கமாகும்.

அதே நேரத்தில், இந்த மானியங்களை மறுமதிப்பீடு செய்வதை அரசாங்கம் செயல்படுத்துகிறது என்று அர்மிசான் விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset