நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 15 அரசு ஊழியர்கள் கைது

புத்ராஜெயா:

கிட்டத்தட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 15 அரசு ஊழியர்கள் எம்ஏசிசி கைது செய்துள்ளது.

நாட்டின் நுழைவாயில் வழியாக புகையிலை, சிகரெட்,  மது கடத்தல் கும்பலிடம் இருந்து அப் பணத்தை அவர்கள் பெற்றதாக நம்பப்படுகிறது.

மார்ச் 11 முதல் உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட ஓப் சம்பா 2.0 சோதனை நடவடிக்கையின் மூலம் எம்ஏசிசியின் பணமோசடி தடுப்பு பிரிவு அவர்களை கைது செய்தது.

கைதானவர்கள் அனைவரும் ஆண்களாவர்.

தகவலின்படி  30 முதல் 50 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அனைவரும் 2017 முதல் 2023க்கு இடையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset