நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 2 முதல் 3 ரிங்கிட் வரை குறையும்: அமைச்சர் சாபு

கோலாலம்பூர்:

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் சில்லறை விற்பனை விலை இன்று முதல் சந்தையில் ரிங்கிட் 2 முதல் 3 ரிங்கிட் வரை குறையும்.

விவசாயம்,  உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹம்மத் சாபு இதனை தெரிவித்தார்.

தற்போது, ​10 கிலோ கிராம் பேக்கேட் அரிசி 38 முதல் 45 ரிங்கிட் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

மேலும் புதிய மாற்றத்துடன், அதே அரிசி பேக்கெட்டின் சில்லறை விலை 35 ரிங்கிட்டாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தின் மூலம் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

மேலும்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெர்னாஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி, மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்காக, சந்தையில் 2 முதல் 3 ரிங்கிட் வரையிலான இறக்குமதி வெள்ளை அரிசியின் சில்லறை விற்பனை விலையில் குறைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் அது அமலுக்கு வருகிறது என்று சாபு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset