நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

48 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி கடன் செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் அமீர் ஹம்ஸா அசீசான்

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 48.06 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி கடனை அரசாங்கம் திருப்பி செலுத்தியுள்ளது.

இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசீசான் இதனை மக்களவையில் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் செலுத்தப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (14.2 பில்லியன் ரிங்கிட்) இதில் அடங்கும்.
இது 2023 பட்ஜெட்டின் கீழ் ஒதுக்கப்பட்டது.

செலுத்த வேண்டிய மீதமுள்ள 1 எம்டிபி கடன் வட்டி ஆகும். அதன் அசல் மதிப்பு R5 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

அது 2039 இல் முழுமையாக அது செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த 2020இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அரசாங்கம் கோல்ட்மேன் சாச்ஸிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (11.8 பில்லியன் ரிங்கிட்) செலுத்தப்பட்டது.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள்  1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (6.6 பில்லியன் ரிங்கிட்) சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset