நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4,000 குடியுரிமை விண்ணப்பங்களில் 80% தீர்வு காணப்பட்டது: சைபுடின்

கோலாலம்பூர்:

21 வயதிற்குட்பட்டவர்களுக்கான  3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் மார்ச் 7ஆம் தேதி வரை  தீர்வு காணப்பட்டது.

அரசியலமைப்பின் பிரிவு 15(2) இன் கீழ் இது அங்கீகரிக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

அந்த எண்ணிக்கையில் 80% விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

மீதமுள்ளவை ஆவணங்கள் முழுமையடையாமல், பாதுகாப்பு விவகாரங்களில் தேர்ச்சி பெறாததால் நிராகரிக்கப்பட்டன.

முழுமையான விண்ணப்பங்கள், தேசியப் பதிவுத் துறையிலிருந்து ஒரு கடிதத்தை பெறும். 

கடிதம் கிடைத்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

அவர்கள் நேரடியாக தேசிய பதிவிலாகாவிற்கு  வர வேண்டும்.

குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படும்.

பின்னர் அவர்கள் தொடர்புடைய தனிப்பட்ட ஆவணங்களை வழங்கலாம் என்று அமைச்சில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset