நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் வார்த்தைக் கொண்ட  காலுறைகள்: மாமன்னர் அதிருப்தி

கோலாலம்பூர்:

பல்பொருள் அங்காடி கடைகளில் அல்லாஹ் என்ற வார்த்தைக் கொண்ட காலுறைகள் விற்பனை செய்வது தொடர்பான சர்ச்சையில் தனது அதிருப்தியை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் முகநூல் பதிவின் வாயிலாக வலியுறுத்தினார்.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை மதிக்கிறார்கள்.

அம்மக்களின் கோபத்தை தூண்டும் இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா, காலுறைகள் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

முன்னதாக கேகே மார்ட்  விற்கப்பட்ட காலுறைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset