நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய சட்டத்தில் பிரதமரின் அதிகாரங்கள் தொடர்பில் மக்களவையில் அமளி துமளி 

கோலாலம்பூர்:

வெளிநாட்டு அதிகார வரம்பு விலக்கு மசோதா 2023க்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக மசோதாவின் கீழ் பிரதமரின் அதிகாரப் பிரிவு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் அமளி துமளி ஏற்பட்டது.

மலேசிய நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் இருந்து ஒரு வெளிநாட்டு அல்லது அதன் சொத்துக்கள், நாட்டின் தலைவர், அரசாங்கத் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் தான் இப்புதிய சட்டம் இயற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின், கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் தகியூடின் ஹசான் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக சட்டப் பிரிவு 32, பிரிவு 33ஐ குறித்து கேள்வி எழுப்பினர்.

எந்தவொரு வெளிநாட்டு அரசையும் வழக்குத் தொடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் அதிகாரம் அல்லது தொடர்புடைய விதிமுறைகளை உருவாக்குவது  ஏற்புடையது இல்லை.

மேலும் நாட்டின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கக்கூடிய விஷயங்களை நாங்கள் விரும்பவில்லை.

ஒரு பிரதமருக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்படுவதால் அது பல சர்ச்சைகளும் ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset