நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ஜாஹிட் ஹமிடி 

புத்ராஜெயா:

நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹம்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

பண்டிகைக் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பு கலாச்சாரம் மலேசியாவில் தனித்தன்மை வாய்ந்த  ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் ஒரு நாள் மட்டுமே நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள் என அங்கு வசிக்கும் தனது நண்பர்கள் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். 

ஆனால், மலேசியாவில் நோன்பு பெருநாள் 30 நாட்கள் கொண்டாடுகிறோம்.

இந்தக் கொண்டாட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது முக்கியமல்ல, வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட பல்வேறு இன குழுக்களிடையே சமூக ஒருங்கிணைப்பு, தனித்துவமான தோழமை உணர்வுடன் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.

ஸ்ரீ சத்ரியாவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி போது பத்திரிகையாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வுகள் தலைவர்கள் மக்களுடன் நட்புறவு கொள்வதற்கான ஒரு தளமாகவும் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

எனது விருந்தினர்கள் புத்ராஜெயா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து மட்டுமல்ல நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் ஆவர். உதாரணமாக, சபா மற்றும் சரவாக்கிலிருந்தும் நண்பர்கள் வந்தனர். 

ஏனென்றால், நாங்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம்.

ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், எங்களுக்கு நாடு முழுவதும் கிளைகள் மற்றும் பிரிவுகள் உள்ளன, எனவே அவர்கள் இதன் மூலம், என்னைச் சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள் என ஜாஹிட் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset