நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோசமான விமான நிலையங்களில் கேஎல்ஐஏ; போக்குவரத்துறை அமைச்சு கண்காணிக்கும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கேஎல்ஐஏ கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் தொடர்பான பார்வைகள் அல்லது ஆய்வுகளை போக்குவரத்து அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

கேஎல்ஐஏவில் சில பலவீனங்கள் இருப்பதை போக்குவரத்துத் துறை அமைச்சு அறிந்துள்ளது.

அதனால் அவ்விமான நிலையத்தை மேம்படுத்த அமைச்சு முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கும் என்று அதன் அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

தற்போது ஏரோட்ரெய்னை பழுது பார்ப்பது, பயண பெட்டிகள் மேலாண்மை அமைப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய இரு திட்டங்கள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிவடைய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும்.

இப்படி விமான நிலையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

முன்னதாக ஆசியாவின் மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் கேஎல்ஐஏ எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset