நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேக வரம்பு மணிக்கு 110 கிலோ மீட்டராக நிலைநிறுத்தப்படும்

கோலாலம்பூர்:

சாலைகளில் வேக வரம்பை உயர்த்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லையென்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் வேக வரம்பு இன்னும் மணிக்கு 110 கிலோமீட்டராக நிலைநிறுத்தப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

அரசாங்கம் வேக வரம்பை அதிகரிக்கத் திட்டமிடவில்லை என்றுன் அது இன்னும் 110 கிமீ / மணி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேக வரம்பை அதிகரிப்பதற்கான அதிகார வரம்பு போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இல்லை.

மாறாக, இது பொதுப்பணி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அந்தோனி லோக் மக்களவையில் தெரிவித்தார். 

நாடு முழுவதும் வேக வரம்பு கேமரா மீறல்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் வேக வரம்பை மணிக்கு 120 கிமீ ஆக உயர்த்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளதா என்று சப்ரி அஜித் எழுப்பியக் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த லோக், நாடு முழுவதும் வேக வரம்பு பொறி கேமராக்கள் (AwAS) சம்பந்தப்பட்ட வேக வரம்பை மீறிய குற்றங்களுக்காக 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 556,055 புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset