நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட்டின் நிலையை வலுப்படுத்தும் திட்டமில்லை: அமீர் அம்சா

கோலாலம்பூர்:

தற்போது மலேசிய ரிங்கிட்டின் நிலையை வலுப்படுத்தும் அரசாங்கம் திட்டமிடவில்லை என்று நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

1998-ஆம் ஆண்டு மலேசிய ரிங்கிட்டின் நிலை வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கையானது அப்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்றது. அதனையே தற்போதிருக்கும் பொருளாதாரச் சூழலுக்கு அமல்படுத்த இயலாது என்று அவர் கூறினார். 

1998-ஆம் ஆண்டின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அப்போதைய பங்குச் சந்தை 76% வீழ்ச்சியடைந்தது. 

தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தை 6% உயர்ந்துள்ளது.

கூடுதலாக, 1998-ஆம் ஆண்டில் இல் வெளிநாட்டிலிருந்து கடன் வாங்குவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16% ஆக இருந்தது.

தற்போது வெளிநாட்டிலிருந்து கடன் வாங்குவது 1-2% விடுக்காடாக மட்டுமே உள்ளது.

மேலும், பேங் நெகாராவின் கையிருப்பில் சுமார் 13 பில்லியன் ரிங்கிட் இருக்கின்றது. 

இந்நிலையில், ரிங்கிட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையைத் தற்போது கையாள வேண்டிய அவசமில்லையென்றும் ரிங்கிட் நிலையைச் சமாளிக்க  அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset